நாய்கள் கடித்துவிட்டதா உடனே இதை செய்யுங்கள் ....

நாய்கள் கடித்தால் செய்ய வேண்டியவை 

மற்றும்  செய்யக்கூடாதவை 

நாய்கள் கடித்தால் செய்ய வேண்டியவை  மற்றும்  செய்யக்கூடாதவை

நம்மில் பெரும்பாலானோர் நாய்களிடம் கடிகள் வாங்கிருக்கக்கூடும் .எனவே அத்தகைய நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என் இந்த தொகுப்பில் பார்க்கலாம் .


வீடுகளில் வளர்க்கும் நாய்களை விட தெருக்களில் இருக்கும் நாய்கள் கடித்தால் ஆபத்து அதிகம் .ஏனேனில் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் பெரும்பாலும் நாம் சமைக்கும் உணவுகளையே  உண்கின்றன ஆனால் தெருநாய்கள் கெட்டுப்போன மற்றும் வீதிகளில் காணப்படும் அனைத்து உணவுகளையும் உண்பதினால் அவற்றில் ஆபத்து அதிகம். இருந்தபோதும் வீட்டு நாய்கள் கடித்தாலும் பாதிப்பு ஏற்படும் .


தெரு நாய்கள் என்பது நமது ஒவ்வொருவருடைய  வீதிகளிலும் இருக்கின்றனவை.இவைகளின் எண்ணிக்கை  ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி கொண்டே வருகிறது .இவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் நாய்கள் உணவிற்காக பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகிறது .

ப்ளூ கிராஸ் போன்ற நிறுவனத்தால் இவைகள் பராமரிக்கப்பட்ட போதும் இன்றளவும் உணவிற்காக தெருக்களில் தெரிந்துகொண்டு இருக்கின்றன .இவைகள் பெரும்பாலும் ரேபீஸ் வகை நோய்களால் பாதிக்க படுகிறது.உணவு பற்றற்றாக்குறை மற்றும் நோய் தொற்றின் காரணமாக நாய்கள் மனிதர்களை கடிக்கின்றன .
நாய்கள் கடித்தால் செய்ய வேண்டியவை  மற்றும்  செய்யக்கூடாதவை .....

இதுமட்டுமல்லாது நம்மில் சிலரும் நாய்களின் மீது கற்களை எடுத்து எறிவது ,நாய்களை பயமுறுத்துவது மற்றும் பட்டாசு போன்றவற்றை அவற்றின் மீது எறிவது போன்றவற்றால் அவைகள் செய்வது அறியாது பதிலுக்கு மனிதர்களை கடிக்கின்றன . 

ஆண்டு ஒன்றுக்கு சுமார் 50,000 பேர் உலகமெங்கும் நாய் கடியால் உயிர் இழக்கின்றனர் .இதில் இந்தியா வில் மட்டும் 15,000  மேற்பட்டோர் இறந்துபோகின்றனர் .குறிப்பாக இதில் 5 லிருந்து 10 வயதுக்குற்பட்டோர் 50% ற்கு மேலானோர் என ஒரு ஆய்வில் கூறுகின்றனர் .

நாய் கடித்தவுடன் முதலில்  செய்யவேண்டியவை :

நாய் கடித்தவுடன் முதலில்  செய்யவேண்டியவை

               முதலில் நாய்கள் கடித்தவுடன் அருகில் இருக்கும் தண்ணீர் குழாயை திறந்து தூய தண்ணீரில் 10 நிமிடம் நன்கு சுத்தம் செய்ய வேண்டும் .ஏனேனில் நாய்கள் கடிக்கும் இடத்தில் நாயின் வாயில் உள்ள கிருமிகள் தங்கி இருக்கும் இப்படி சுத்தம் செய்யும் போது அந்த கிருமிகள் உள்ளே போகாமலும் , அந்த கிருமிகளிடம் இருந்து உருவாகும் ரேபீஸ் நோய் தொற்றிலிருந்தும் நம்மை காப்பாற்றி கொள்ளலாம் 

பிறகு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி செய்துகொள்ள வேண்டும் .காயம் சிறியதாக இருந்தால் கட்டு போடவேண்டிய அவசியம் இல்லை .இருப்பினும் கவனம் அவசியம் .

தடுப்பூசி  (ARV - ANTI RABIUS VACCINE )


தடுப்பூசி  (ARV - ANTI RABIUS VACCINE )

நாய் கடித்தவுடன் தடுப்பூசி என்பது முக்கியமான ஓன்று . 
சிறிய  தானே என்ற அலட்சியம் வேண்டாம் .ஏனேனில் அதில் கிருமிகள் அதிகமாக இருக்கும் .1,3,7,14,28 போன்ற நாட்கள் இடைவெளியில் 5 முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் .

ஆழமான காயங்களுக்கு RABBIES IMMUNE GLIBULIN என்ற தடுப்பூசியை போடுவது நல்லது . இதனால் காயத்தை சுற்றியுள்ள பகுதி விரைவாக குணமாகும் .

குறிப்பு 

  • சிலர் நாய்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் நாம் தடுப்பூசி போட அவசியம் இல்லை என்று கூறுவார்கள் அது முற்றிலும் தவறான கருத்து .
  • வீட்டில் வளர்க்கும் நாயோ , தெருவில் இருக்கும் நாயோ எந்த நாய்கள் கடித்தாலும் நோய் தொற்று ஏற்படும் எனவே கவனம் முக்கியம் .

மேலும் நமது நாட்டின நாய்களை பற்றியும் , அவற்றின் சிறப்பு பற்றியும் அறிய இங்கே கிளிக் செய்யயும் .

இதுபோன்ற சுவாரசியமான தகவலுக்கு நமது வலைதளபக்கத்தை பார்வையிடவும் - https://dogysworld.blogspot.com/
.

















sankar

HAI FRIENDS I AM A AUTHOR OF THE SITE. I GIVE SOME DOG RELATED DETAILS SO PLEASE FOLLOW OUR SITE...

Post a Comment

Previous Post Next Post