Tamil Native dog breed - தமிழக நாட்டு நாய் பற்றிய தொகுப்பு

 தமிழக நாட்டு நாய் பற்றிய தொகுப்பு 

முன்னர் காலத்தில் நாய் என்பது மனிதன் ஓநாய் இனத்திலிருந்து அவனுக்கு ஏற்றார் போல பழக்கிக் கொண்ட ஒரு உய்ரினமாக இருந்தது .மனிதன் அவைகளை வேட்டையாடுவதுக்கும் , காவலுக்கும் பயன்படுத்திவந்தான் .
காலப்போக்கில் அவை மனிதர்களால் அதிக கவனம் ஈர்க்கப்பட்டு இன்று வெறும் வளர்ப்பு பிராணியாகவே பெரும்போலும் வளர்க்கப்படுகிறது.இதனால்  நாய்கள் மனிதனின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது .

இவை பெரும்பாலும் தனி நபராலோ அல்லது ஒரு குடும்பத்தாலோ பராமரிக்கப்படுவதால்  மனிதர்களிடம் அதிகமா நெருங்கி பழகிறது . எனவே பெரும்பாலோனோர் நாய்களுடனே அதிகமா நேரத்தை செலவிடுகின்றனர் .

வெளிநாட்டு நாய்களை போல இல்லாமல் சற்றே வித்தியாசமானது நமது தமிழக நாட்டின நாய்கள் .ஏனெனில் இவை விசுவாசத்திற்கு பெயர்போனவை .எந்த சூழ்நிலையிலும் தனது முதலாளியை விட்டு விலகாது  .

உலகத்தில் 300 க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன .இருந்த போதிலும் அவற்றில் குறைந்த அளவே நமது நாட்டின நாய்கள் .அதில் குறிப்பாக தமிழ் நாட்டின் பிரபலமான நான்கு நாய்களை பற்றி பார்க்கலாம் .

  • கோம்பை (kombai )
  • சிப்பிப்பாறை (sippiparai )மற்றும் கன்னி (kanni)
  • ராஜபாளையம் (rajapalayam )

கோம்பை (kombai )

கோம்பை (kombai )

அடையாளம் 

  • செந்நிறத்தில் இருக்கும் தோற்றம் 
  • மூக்கு ,வாய் களில் கருப்பு நிறம் காணப்படும் 
  • வளைந்த வால்  

கோம்பை இன நாய்கள் தேனிக்கு அருகில் உள்ள கோம்பை என்ற கிராமத்தில் அதிகமா காணப்படுகிறது .இவை அழிந்து போன செங்கோட்டை இன நாய்களை போலவே இருப்பதாக பலரும் கூறியுள்ளது குறிப்பிட்ட தக்கது .

இவை மற்ற நாய்களை காட்டிலும் உயரத்தில் சிறியதாக இருந்தாலும் இதன் பாசமும் ,விசுவாசமும் சிறிதளவும் குறையாது .இவை மிகவும் ஆக்ரோசமானது.

வீட்டில் பாதுகாப்பிற்காக இதை நீங்கள் வளர்த்தால் வெளியாட்களை வீட்டினுள்ளேயே வர சிறிதளவும் அனுமதிக்காது .  கால்நடை பராமரிப்புக்கு மிக சிறந்தது .

சிறப்பு 

முன்னர் காலத்தில் இருந்த மருது சகோதரர்களின் படையில் இவ்வகை நாய்கள்  இருந்ததாகவும் மேலும்  இவர்களின் காளையர் கோவில் போரில் முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது . 

சிப்பிப்பாறை (sippiparai )மற்றும் கன்னி (kanni)


சிப்பிப்பாறை (sippiparai )மற்றும் கன்னி (kanni)

சிப்பிப்பாறை மற்றும் கன்னி இவை இரண்டு நாய்களுமே ஒரே நாய் இனம்தான் .இவைகளின் நிறத்தின் அடிப்படையில் இதனை வகைப்படுத்துகிறார்  .

கருப்பு நிறத்தில் உள்ளதை - கன்னி எனவும் 
இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல்  நிறத்தில் உள்ளதை - சிப்பிப்பாறை எனவும் மக்கள் அழைக்கின்றனர் .

கன்னி இன நாய்கள் பெரும்பாலும் வேட்டையில் சிறந்து விளங்குகிறது .இதில் சிறிதளவு வெள்ளைநிறம் காணப்படும் எனில் இவை பால்கன்னி  என அழைக்கப்படுகிறது .

கன்னி மற்றும் சிப்பிப்பாறை நாய் இவை இரண்டும் ஒரு மித்த பண்புகளையே கொண்டு உள்ளது . இவை பெருபாலும் மலைக்கிராமங்களில் வளர்க்கப்படுகிறது ஏனென்றால் காட்டு விலங்குகளிடம் இருந்து தப்பிக்க மக்கள் இவற்றை வளர்க்கின்றனர் .

மேலும் இதைப்பற்றி முழுமையாக அறிய இங்கே click  செய்யவும் .

ராஜபாளையம் (rajapalayam )

ராஜபாளையம் (rajapalayam )

தமிழக நாட்டு நாய்களில் மிகவும் தனிப்பட்டு காணப்படுவது இந்த ராஜபாளையம் நாய்கள் .தோற்றத்தில் மட்டும் அல்லாமல் பண்புகளிலும் தனித்தே காணப்படுகிறது .

கோம்பை , சிப்பிப்பாறை மற்றும் கன்னியை போல இவை வேட்டையாடுவதில் அதிக பங்களிப்பை காட்டுவதை விட காவல் செய்வதிலேயே அதிகம் கவனம் கொண்டது .இதனால் பெரும்பாலோர் இதனை வீட்டுக்காவலனுக்காக வளர்க்கின்றனர் .மேலும் ராஜபாளைய நாய்கள் மனிதர்களுடன் அதிகமாக ஒன்றி வாழக்கூடியது .

மேலும் இதை பற்றி முழுமையாக அறிய இங்கே click செய்யவும் .

இதுபோன்ற நாய்கள் பற்றிய தகவலுக்கு நமது வலைத்தளத்தை பார்வை இடவும் :https://dogysworld.blogspot.com/

sankar

HAI FRIENDS I AM A AUTHOR OF THE SITE. I GIVE SOME DOG RELATED DETAILS SO PLEASE FOLLOW OUR SITE...

Post a Comment

Previous Post Next Post