Rajapalayam Dog Information - ராஜபாளையம் நாய் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் சிறப்பம்சம்

 

ராஜபாளையம்  நாய் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் சிறப்பம்சம் 


Rajapalayam Dog Information - ராஜபாளையம்  நாய் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் சிறப்பம்சம்

தமிழ்நாட்டின் விருதுநகரில்  உள்ள ராஜபாளையம் என்ற ஊரில் இருந்து இந்த வகை நாய்கள் கண்டறியப்பட்டதால் இதனை ராஜபாளையம் என்று அழைத்தனர் .

தமிழ் நாட்டின் மிக முக்கியமான நாய் இனங்களில் ஓன்று இந்த ராஜபாளையம்  நாய்கள் .அன்றய கால கட்டத்தில் ராஜாக்கள் இவ்வகை நாய்களை அதிகமாக  வளர்த்துவந்தனர் . ஏனென்றால் இவை போர்களில் முக்கிய பங்கு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது .

வரலாறு 

விஜயநகர பேரரசின் வருகையின் பொது பாளையக்காரர்களால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது இந்த ராஜபாளையம் நாய்கள் தற்பொழுது இவை தமிழகத்தில் மட்டுமே உள்ளது .

 சிறப்பு 

  • குறிப்பாக முன்னர் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து போர் செய்யும் போது அவர்களின் குதிரை படையை தகர்ப்பதற்கு ராஜபாளையம் நாய்கள் பயன்படுத்த பட்டன .

  • 2005 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் தலையில் இடம்பெற்று பெருமைப்படுத்தப்பட்ட ஒரே தமிழக நாயினம் என்ற பெருமையை கொண்டுள்ளது இந்த ராஜபாளையம் நாய்கள் .

ராஜபாளையம்  நாயின் அடையாளம் 

  • வெள்ளைநிறம் கொண்டவை .
  • நீண்ட மற்றும் உறுதியான வால் 
  • ஒல்லியான உடலமைப்பு 
  • கம்பிரமான கால்கள் 
  • குட்டையான ரோமம் 
  • இளசிவப்பு நிற முகம் 

பொதுவாக இவை வெள்ளை நிறத்தில் மட்டுமே காணப்படுகிறது .
இவற்றின் ஆயுள் காலம் சுமார் 9 லிருந்து 12  ஆண்டுகள் வரையும் உயிர் வாழும் திறன் கொண்டது  .

பொதுவாக ஆண் நாய்கள் 65cm  லிருந்து 72 cm வரையும் பெண் நாய்கள் 62 cm லிருந்து 68 cm வரையும் உயரம் வளரும் . இதனால் மணிக்கு 40 km /h  திலிருந்து45 km /h வரையும் வேகமாக ஓட முடியும் .

Rajapalayam Dog Information - ராஜபாளையம்  நாய் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் சிறப்பம்சம்

இவை தற்பொழுது குறிப்பாக பண்ணை காவலுக்கு , கால்நடை பாதுகாப்பிற்கும்  மட்டுமே வளர்க்க பட்டு வருகிறது .இவை வீட்டில் உள்ளவர்களுடன் இயல்பாக பழகும் வல்லமை கொண்டது .எனவே சிறிய குழந்தைகளை கொண்டுள்ளவர்கள் அதன் பாதுகாப்பிற்கு தாராளமாக ராஜபாளையம் நாய்களை வளர்க்கலாம் என இதனை வளப்பவர்கள் கூறுகிறார்கள் .

ராஜபாளையம் நாய்கள் அவைகளை வளர்க்கும் முதலாளிகள் மீது அதிகம் விசுவாசத்துடன் இருக்கும் 

எ .கா :

சமீபத்தில் ராஜபாளையம் நாய்களை வளர்க்கும் ஒரு முதலாளியை ஒரு புலி ஓன்று தாக்கியபோது அவர் வளர்த்த 6 ராஜபாளையம் நாய்கள் அந்த புலியிடம் இருந்து அவரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது .

பராமரிப்பு 

  • குட்டையான ரோமங்களை கொண்டுள்ளதால் முடி உதிருக்கு பிரச்சனையும் இல்லை .அதே சமயம் இவை வெள்ளைநிற உடலமைப்பை கொண்டுள்ளதால் வாரம் வாரம் குளிக்க வைப்பது அவசியம் .
  • நம்முடைய வீட்டில் சமைக்கும் உணவுகளையே  இதற்க்கு தாராளமாக கொடுக்கலாம் .அவித்த முட்டைகள் கொடுப்பது அதிக நன்மைகளைத்தரும் .
  • தினமும் சிறிது தூரம் நடைப்பயிற்சி அவசியம் ,

வெளிநாட்டு நாய்களை விட அன்பு ,பாசம்,காவல் எல்லாவற்றிலும் சிறந்தது இந்த ராஜபாளையம் நாய் இனம் .பராமரிப்பும் குறைவே .இன்றளவும் தமிழ் நாட்டில் அதிகமான பகுதிகளில் இந்த நாய் இனம் வளர்க்கப்பட்டு வருகிறது .குறிப்பாக கிராமப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது .

தற்போது இந்த ராஜபாளையம்  நாய் இனம் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது எனவே சிலர் இந்த நாய் வகைகளை இனப்பெருக்கம் செய்து அதனை விற்பனை செய்தும் வருகின்றனர்.அதன் படி ஒரு ராஜபாளையம் நாய் சுமார் 5 லிருந்து 8 குட்டிகள் வரையும் ஈன்றெடுக்கும் .

Rajapalayam Dog Information - ராஜபாளையம்  நாய் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் சிறப்பம்சம்

ஒரு குட்டியின் விலை தற்பொழுது 8000 to 12000 வரையும் விற்கப்படுகிறது .குட்டியின் தரத்தை பொருத்தே விலை தீர்மானிக்கப்படுகிறது .


இது போன்ற மேலும் நாய்கள் பற்றிய தகவல்களுக்கு நமது dogysworld பக்கத்தை பார்வையிடவும் .அல்லது இங்கே கிளிக் செய்யவும் .

sankar

HAI FRIENDS I AM A AUTHOR OF THE SITE. I GIVE SOME DOG RELATED DETAILS SO PLEASE FOLLOW OUR SITE...

Post a Comment

Previous Post Next Post