sippiparai dog information in tamil - சிப்பிப்பாறை நாய் பற்றிய தகவல்கள்

சிப்பிப்பாறை நாய் பற்றிய தகவல்கள் 


sippiparai dog information in tamil - சிப்பிப்பாறை நாய் பற்றிய தகவல்கள்

தமிழ் நாட்டின் மிக முக்கியமான நாய் இனங்களில் ஓன்று இந்த சிப்பிப்பாறை நாய்கள் .மதுரைக்கு அருகில் உள்ள சிப்பிப்பாறை என்ற கிராமத்தில் இருந்து அரச குடும்பத்தால் உருவானது இந்த சிப்பிப்பாறை நாய்கள். 

சிப்பிப்பாறை நாயின் அடையாளம் 

சிப்பிப்பாறை நாயின் அடையாளம்

  • கூர்மையான முகம் 
  • நீண்ட மற்றும் உறுதியான வால் 
  • ஒல்லியான உடலமைப்பு 
  • கம்பிரமான கால்கள் 
  • குட்டையான ரோமம் 





இவற்றில் இரண்டு நிறங்கள் உள்ளன . 
  • இள மஞ்சள் நிறத்தில் உள்ளதை -சிப்பிப்பாறை எனவும் 
  • கருப்பு நிறத்தில் உள்ளதை - கன்னி எனவும் அழைக்கின்றனர் . .
இவற்றின் ஆயுள் காலம் சுமார் 12 லிருந்து 15 ஆண்டுகள் வரையும் உயிர் வாழும் திறன் கொண்டது  .

sippiparai sunning speed

பொதுவாக ஆண் நாய்கள் 62cm  லிருந்து 75 cm வரையும் பெண் நாய்கள் 60 cm லிருந்து 70 cm வரையும் உயரம் வளரும் .எனவே மிக நீண்ட உடலமைப்பை கொண்டுள்ளதால் இதனால் மணிக்கு 50 km /h  திலிருந்து 65  km /h வரையும் வேகமாக ஓட முடியும் .

அன்றய கால கட்டத்தில் காட்டுப்பன்றிகள் , முயல் போன்றவற்றை வேட்டையாட இந்த சிப்பிப்பாறை நாய்கள் வளர்க்கப்பட்டன .அதுவே கால போக்கில் வீட்டின் காவல் பிராணியாகவும் வளர்க்கப்பட்டது .

தமிழ் நாட்டின் முக்கியமான நாய்களாக உள்ளவை சிப்பிப்பாறை ,கன்னி ,ராஜபாளையம்,கோம்பை ஆகும் .இதில் தனித்திறமையும் ,வேட்டையாடும் திறனும் அதிகமா உள்ளது இந்த சிப்பிப்பாறை (sippiparai )நாய் இனம்.

இதன் உரிமையாளரின் கட்டளைகளை மீறாமலும் ,உரிமையாளருக்கு எதாவது பிரச்சனை என்றால் உயிர்யை குடுத்து காப்பாற்றவும் செய்ய்யும் .இதனால் அன்றய காலகட்டத்தில் அதிகமாக இந்த வகை நாய் இனங்கள் எல்லாருடைய வீட்டிலும் வளர்க்கப்பட்டது .

பராமரிப்பு 

  • இதற்கென்று தனி பராமரிப்பு என ஏதும் தேவையில்லை .
  • குட்டையான ரோமங்களை கொண்டுள்ளதால் முடி உதிருக்கு பிரச்சனையும் இல்லை .
  • நம்முடைய வீட்டில் சமைக்கும் உணவுகளையே  இதற்க்கு தாராளமாக கொடுக்கலாம் .
  • தினமும் சிறிது தூரம் நடைப்பயிற்சி அவசியம் ,னென்றல் அவை வேட்டையாடும் குணம் கொண்டுள்ளதால் நீண்டதூரம் ஓடும் வல்லமை கொண்டது.
  • வீட்டில் எல்லாரிடமும் நன்கு பழகும் ஆற்றல் கொண்டது.
  • கால்நடை பராமதிப்பதில் இதற்கு மிஞ்சிய நாய் இனமே கிடையாது . 

வெளிநாட்டு நாய்களை விட அன்பு ,பாசம்,காவல் எல்லாவற்றிலும் சிறந்தது இந்த சிப்பிப்பாறை நாய் இனம் .பராமரிப்பும் குறைவே .இன்றளவும் தமிழ் நாட்டில் அதிகமான பகுதிகளில் இந்த நாய் இனம் வளர்க்கப்பட்டு வருகிறது .குறிப்பாக தென் தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது .

தற்போது இந்த சிப்பிப்பாறை நாய் இனம் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது எனவே சிலர் இந்த நாய் வகைகளை இனப்பெருக்கம் செய்து அதனை விற்பனை செய்தும் வருகின்றனர்.
sippiparai


ஒவ்வொரு வீட்டிலும் ஓன்று அல்லது இரண்டு சிப்பிப்பாறை நாய்கள் வளைக்கப்பட்டு வருவதை நாம் காணலாம் . 


இது போன்ற மேலும் நாய்கள் பற்றிய தகவல்களுக்கு நமது dogysworld பக்கத்தை பார்வையிடவும் .அல்லது இங்கே கிளிக் செய்யவும் .

sankar

HAI FRIENDS I AM A AUTHOR OF THE SITE. I GIVE SOME DOG RELATED DETAILS SO PLEASE FOLLOW OUR SITE...

Post a Comment

Previous Post Next Post